அரச எதிர்பு சுவரொட்டிகளை ஒட்டிய 4 ஜேவிபி யினருக்கு பிணை.
அரசுக்கு எதி ரானை சுலோகங்கள் அட ங்கிய சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் நேற்றிரவு கல்தோட்ட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு இன்று பலாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நான்கு ஜேவிபி ஆதரவாளர்களை மஜிஸ்ரேட் நீதிமன்று 2500 ரூபா சுய பிணையில் விடுதலை செய்துள்ளது. இவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர்கள் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை ஒட்டியதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற வாதத்தை முன்வத்து பிணை கோரியிருந்தனர்.
அதேநேரம் ரத்தினபுரி பிரதேசத்தில் ஜேவிபி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக பெண்ணொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பிரசாட் மஞ்சுள எனும் வேட்பாளர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். வேட்பாளர் ஜனாதிபதி , அமைச்சர் ஜோன் செனவிரத்தின மற்றும் தன்மீது தவறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தார் என குறிப்பிட்ட பெண்ணினால் முறையிடப்பட்டிருந்தது. இவர் இன்று ரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது பிணை வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment