பெல் 212 மூலம் மீட்கப்பட்ட கர்பிணித் தாய் வானூர்தியிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
ஹொரப்பொதான மற்றும் சாலியபுர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 07 கர்பிணித் தாய்மார்கள் உட்பட 30 பேரை இலங்கை விமானப்படையினர் வானூர்தி மூலம் மீட்டெடுத்துள்ளனர்.
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பல அசௌகரியங்களை எதிர் கொண்டிருக்கும் அதேவேளை அநுராதபுர விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த பெல் 212 மற்றும் எம்ஐ 17 ஆகிய இரு வானூர்திகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
ஹொரோபதான பகுதியில் பெல்212 மூலம் மீட்கப்பட்ட நான்கு கர்பிணித் தாய்மார்களில் ஒருவர் அவ் வானூர்தியிலேயே குழந்தைப் பேற்றை எய்தியுள்ளார். இவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மரங்களில் சிக்கிய நிலையில் இருந்த இரண்டு பெண்களை மீட்டதுடன் எம்ஐ 17 மூலம் ஹொரோபதான வைத்தியசாலையில் இருந்து முதியோர் குழுவினரும் மீட்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment