கொழும்புத்துறைமுகத்தில் 15 கோடி ரூபா செலவில் எரிபொருள் தாங்கி நிர்மாணம்.
இந்து சமுத்திரத்தைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் மையமாக இலங்கையை மாற்றும் நோக்குடன், கொழும்புத்துறைமுகத்தில் மற்றுமொரு எரிபொருள் தாங்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இத்தாங்கி அடுத்த வாரம் திறக்கப்படும் என தெரியவருகின்றது.
இதனுடாக இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் எரிபொருள் களஞ்சிய வசதிகள் விஸ்தரிக்கப்படுகின்றன.
ஐந்து துறைகளில் இலங்கையை ஆசியாவின் கேந்திர நிலையமாக மாற்றும் எதிர்பார்பில் துறைமுகத்தின் இயந்திர ஆழிகளைத்திருத்தி நவீனப்படுத்தும் முயற்சியையும் துறைமுக அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment