'இந்தியா - பாக். அணு ஆயுத போர் வெடித்தால் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம்'
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நடத்திய மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'விக்கிலீகஸ்" இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு நடந்த அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 12 மில்லியன் பேர் கொல்லப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை போட்டி, நேரடி அணு ஆயுத போருக்கான சக்தியை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா அப்போது எச்சரித்துள்ளது.
மேலும் அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ், இரசாயன ஆயுதங்களை தயாரிக்கக் கூடிய பொருட்களை சிரியாவுக்கு விற்பதை நிறுத்துமாறு இந்தியாவை எச்சரித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment