Friday, January 28, 2011

முல்லைத்தீவு NERD இயக்குனர் புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவராம்.

NERD எனப்படும் வடக்கு கிழக்கு புனரமைப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான இயக்குனர் புலிகளின் புலனாய்வுத் துiயைச் சேர்ந்தவர் என அரச புலனாய்வு, மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சுக்கு அவசர அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. சிவபிரகாசன் சிவஜெயன்தன் எனப்படும் இவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் நீண்டநாள் செயற்பாட்டாளர் எனவும் இறுதி கட்ட யுத்தத்தின்போது மக்களோடு மக்களாக இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்து குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டபோது, விண்ணப்பித்து தெரிவாகியிருந்தார் என தெரியவருகின்றது.

அதேநேரம் குறிப்பிட்ட பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டம் அதிகுறைந்த கல்வித்தகைமையாக வேண்டப்பட்டிருந்தபோதும், மேற்படி அடிப்படைத்தகமையை பெற்றிறாத அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபாராக இருந்த எமில்டா சுகுமாரன் பயத்தின் அடிப்படையில் நியமனத்தினை வழங்கியதாக கூறப்படுகின்றது.

வட கிழக்கு புனரமைப்பு திணைக்களம் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. சிவப்பிரகாசன் சிவஜெயந்தன் தனது சேவைக்காலப் பகுதியில் முல்லைத்தீவு பிரதேசத்தில் மீள் குடியேற்றத்தின் நிமிர்த்தம் வீடுகள் வழங்கப்பட்டபோது, இறந்ந புலிகளின் குடம்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர் புலிகளியக்கத்திலிருந்து கணவன்மாரை இழந்துள்ள பல பெண்களுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக நடந்து கொண்டுள்ளார் என்ற பரவலான குற்றச்சாட்டு ஒன்றும் இவர் மீது நிலவி வருகின்றது.

மேலும், இவருக்கு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பாக பலத்த சந்தேகங்கள் உள்ளதுடன், கே.பி வட மாகாணத்தில் களமிறங்கியுள்ள நிலையில் கே.பி யுடன் ஒத்துழைக்காதவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com