மூதூர் MPCS சங்க கட்டிடங்களை புனரமைக்க கருணாவால் நிதி ஒதுக்கீடு.
மூதூர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினருக்கும் அமைச்சர் முரளிதரனுக்குமிடையேயான சந்திப்பொன்று நேற்று அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது மூதூர் பிரதேசத்தில் இயங்கும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் (MPCS) கடந்த கால யுத்ததில் சந்தித்துள்ள இழப்புக்கள் தொடர்பாக ஊ ழியர்களினால் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் அதன் புனர்நிர்மாணத்திற்கான நிதி வேண்டுதலும் விடுக்கப்பட்டது.
வேண்டுதல்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கட்டிடங்களை மீளப்புனரமைப்பதற்கும் வேண்டிய நிதியினையும் மற்றும் வாகனம் ஒன்றை பொற்றுக்கொடுப்பதற்கு முன்வந்துடன் இவ் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர் அவர்களுடன் தொலைபேசியுடன் தொடர்புகொண்டு சங்க உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தகவல்: ஊடகப்பிரிவு.
அமைச்சுக்காரியாலயம் கொழும்பு
0 comments :
Post a Comment