பத்மநாபா துரோகியா? தியாகியா? என்பது இப்போது பேசுவதற்குரிய விடயமல்ல. சுரேஸ்
கொழும்பிலிருந்து வெளிவரும் அததெரண இணையத்தளம் முன்னாள் மண்டையன் குழுவின் தலைவன் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் நேர் காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்நேர்காணலில் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தில் இடைவெளி ஒன்று எற்பட்டிருக்கின்றது என்பதை உணர்கின்றீர்களா என சுரேஸிடம் கேட்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்ட அவர் புலிகளியக்கம் அழிக்கப்பட்டமையால் அவ்விடைவெளி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளதார். இக்கருத்து தொடர்பாக இலங்கைநெற் சுரேஸ் பிரேமச்சந்திரனை தொடர்புகொண்டு „ தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளி அமார் திரு. அப்பாத்துரை அமிர்தலிங்கம் முதல் அமரர் திரு. நீலன் திருச்செல்வம் வரையான தமிழ் புத்தி ஜீவிகளையும், சகல அரசியல் கட்சிகளின் தலைமைகளையும் புலிகள் கொன்றொழித்தமையினால் ஏற்பட்டுள்ள இடைவெளி இல்லையா எனக்கேட்டபோது, அவர் வழங்கிய பதிலினை ஒலிப் ப திவில் கேட்கலாம்.
புலிகளியக்தத்தினால் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் யாவருக்கும் புலிகளினால் துரோகிகள் பட்டம் வழங்கப்பட்டமை யாவரும் அறிந்தது. அந்தவகையில் சுரேஸ் பிறேமச்சந்திரன் சார்ந்த ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் அமரர் தோழர் பத்மநாபா துரோகியா? தியாகியா? எனக் கேட்டபோது, இது இப்போது கதைப்பதற்குரிய விடயம் அல்லவென சுரேஸ் தொலைபேசி அழைப்பை துண்டித்துக் கொண்டார்.
0 comments :
Post a Comment