பாதுகாவலரால் பாகிஸ்தான் ஆளுனர் படுகொலை!
பஞ்சாப் மாநிலத்தில் கவர்னராக இருந்தவர் சல்மான் தசீர். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 46 வயதான இவர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோஷார் மார்க்கெட் பகுதியில் இருந்து தன் காரில் ஏற முயன்றார். அப்போது அவரது பாதுகாவலர்களில் ஒருவர் மிக நெருக்கமாக இருந்தபடி எந்திர துப்பாக்கி மூலம் கவர்னரை சுட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் உடலில் 9 குண்டுகள் பாய்ந்து இருந்தன. கழுத்திலும், மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்து போனார். அவர் மரணத்துடன் போராடிய நிலையில் அவரை காப்பாற்ற டாக்டர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அவரை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசியமான இடத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக மேலும் 6 பேர் கைதானார்கள்.
0 comments :
Post a Comment