மீள் குடியேற்றியதில் இலங்கை அரசு பெருமையடையலாம். அமெரிக்கா புகழாரம்.
போரில் இடம் பெயர்ந்த மக்களை மறுகுடியமர்த்தம் செய்ததற்காக சிறிலங்க அரசு பெருமைபடுவதற்கு உரிமை உள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிசியா பூயூடேனிஸ் கூறியுள்ளார். யுஎஸ் எய்ட் சார்பாக போரினால் இடம் பெயர்ந்த வட பகுதி மக்களுக்கான உணவு தேவைக்கு 55 இலட்சம் டாலர் நிதியுதவி தரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய பூயூடேனிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
'போரின் முடிவிற்குப் பிறகு சிறிலங்க அரசு எதிர்கொண்ட மாபெரும் சவாலை நாம் மறந்திருக்க முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பெரும் பணி அது. இடம் பெயர்ந்த மக்களை குடியமர்த்தியதற்காக சிறிலங்க அரசு பெருமையடை அதற்கு எல்லா உரிமையும் உள்ளது. அந்த மாமுயற்சிக்கு உதவுவதில் நாங்களும் பெருமைபடுகிறோம்' என்று பூயூடேனிஸ் கூறியுள்ளார்.
யுஎஸ் எய்ட் அளித்த நிதியுதவியை சிறிலங்க பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பசில் ராஜபக்ச பெற்றுக்கொண்டார்.
1 comments :
It is better to appreciate the good deeds,rather than condemning or making ugly comments.Comments made by
the representative of USA was
extremely good for the country,as a result of the remarks we can expect more and more valuable efforts will be taken by the Srilankan government for the displaced people.Thank you USA
Post a Comment