மக்கள் ஜனநாயக முன்னணி தேசிய மகாநாட்டில் மத்திய குழு தெரிவானது.
பத்திரிக்கைச் செய்தி 1.
2010 டிஸெம்பர் மாதம் 10ம் நாள் புத்தளம் விருதோடையில் கூடிய எமது கட்சியின் முதலாவது தேசிய மகாநாடு, இரண்டு நாட்களாக நடந்த அரசியல் கலந்துரையாடலின் பின்னர் மகா நாட்டில் விவாதத்திற்காக சமர்பிக்கப்பட்ட கட்சியின் யாப்பையும், அரசியல் அறிக்கையையும், ஸ்தாபன அமைப்பு அறிக்கையையும், வரவு செலவு அறிக்கையையும் ஏகமனதாக அங்கீகரித்து ஏழு அங்கத்தவர்கள் கொண்ட தலைமைக் குழுவை உள்ளடக்கிய ஒரு இருபாத்தொரு அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு மத்தியக் குழுவையும் ஏகமனதாகத் தெரிவு
செய்தது.
தலைமைக் குழுவில் பின் வருவோர் அங்கம் பெறுவர்.
1.ப. இரமணன் தலைவர்.
2.ம.க.அபூயூசூப் பொதச் செயலரளர்
3.வ.ச.நீலகண் சாஸ்திரி. தேசிய அமைப்பாளர்..
4.க.நவரத்தினம் உப தலைவர்
5.இப்றாம்ஸா பயூர்தீன். தனாதிகாரி;.
6.சமிந்த சமரதுங்க உதவிப் பொதுச்; செயலரளர்..
7.நவநீதன் பாலசிறீ .உதவித் தனாதிகாரி.
மு.க.அபூயூசூப்
பொதச்செயலரளர்
பத்திரிக்கைச் செய்தி 2.
16-01-2011 ல் கொழும்பில் கூடிய எமது மத்திய குழு எதிர் வரும உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இடதுசாரி, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் போட்டியிடுவதென ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது..
தமிழ் பேசும், பல்வேறு சமயங்களையும், பிரதேசங்களையும்; சேர்ந்த அனைவரும் ஒரே தமிழ் தேசிய இனத்தின். வேறு படுத்த முடியாத இயற்கையான ஒரே அங்கமெனக் கணிக்கும் எமது கட்சி தமிழ் தேசியத்தின் யாராலும் பறித்தெடுக்க முடியாததும் தமிழ் தேசியத்தினாலும் விட்டுககொடுக்க முடியாததுமான அனைத்து தேசிய ஜனசாயக உரிமைகளையும் ஸ்தாபித்து, உறுதிப்படுத்தி, முழுத் தேசத்தினதும, அனைத்து மக்களினதும் சமூக முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் தேசிய வளர்சியை உத்திரவாதப்படுத் இந்த உபாயமொன்றே ஒரு புத்திநாலித்தனமான அரசியல் காய் நகர்தலென எமது மத்திய குழு கணிக்கின்றது.
தேசம் இன்று முகம கொடுக்க நேர்ச்திருக்கும் எந்தப் பிரச்சனையும் இலங்கை அரசினால் தீர்த்து வைக்க முடியாதென்பதையும், அண்டை நாடான இந்தியாவின் ஆளும் வர்க்கம் இலங்கையின் எல்லைகளை ஒட்டிய மன்னார் வளைகுடாவிலும், வங்காள விரிகுடாவிலும் உள்ள கடற்,கனிப்பொருள் வளங்களை சுரண்டுமகமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை தீரப்பது போல ஆடும் நாடகத்திலே இலங்கை அரசையும், அனைத்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும் பங்கு தாரகர்ளாக்குpயுள்ளது.. இந்த உள்நாட்டு, வெளிநாட்டு சந்தர்ப்பவாதக் கூட்டுகளினால் நமது தேசத்திற்கும் மக்களுக்கம் எந்தப் பயனும் இல்லை என்பதை அனைத்து மக்களுக்கும் ஏடுத்துக்கூறி அவரகளை மிகச் சரியான அரசியல் வழியில இயங்க வைக்க இந்தத் தேர்தலில் நமது கடசியும் மக்களின் உண்மையான நேச சக்திகளும் இணைந்து களமிறங்கி இயங்குவர்.
மு.க.அபூயூசூப்
பொதுச' செயலாளர்
மத்தியக் குழுவின் சார்பாக.
0 comments :
Post a Comment