Friday, January 7, 2011

கேபியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள். ரணில் ஆவேசம்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் தேடப்பட்டுவரும் குமரன் ப த்மநாதன் எனும் கே.பி யை உடனடியாக இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறும், இதனை வலியுறுத்தி மக்கள் தெருக்களில் இற ங்கி ஆர் ப்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்

நீர்கொழும்பு, சீதுவையில் நேற்று இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், சரத் பொன்சேகா தன்னுடைய மருமகனுடன் கம்பனி ஒப்பந்தம் செய்து கொண்டார் என்பதற்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் என்ன லாபம் கிடைத்தது என தான் சரத் பொன்சேகாவிடம் கேள்வியெழுப்பிய போது அதற்கு அவர் எந்த லாபம் கிடைக்கவில்லை என பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜயலத் ஜயவர்த்தனவை அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான குமரன் பத்மநாதனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அரசினை வலியுறுத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com