அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வில் த.தே.கூ வினுள் குழப்பம்.
ஹென்றியை சுட பொலிஸாரின் பிஸ்ரலை பறித்தார் சந்திரநேரு சந்திரகாந்தன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குவேட்டை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங் களுக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் மாவை தீவிரமாக களமிறங்கியுள்ளார். இத்தேர்தல் விடயங்களில் கலந்து கொள்ளும்பொருட்டு லண்டனிலிருந்து முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும் களமிறங்கியுள்ளார்.
பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான தேர்தல் மார்ச் மாதம் 12ஆம் திகதி நடாத்தப்படவுள்ளன.
கடந்த 18 ம் திகதி மேற்படி மன்ற ங்களுக்கான வேட்பாளர் தேர்வு ஆய்வுகள் முன்னாள் பாராளுன்ற உறுப்பினரான சந்திரநேருவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இத்தெரிவுகளின்போது பல குளறுபடிகள் இடம்பெற்றதாகவும் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் மிதமிஞ்சிய அதிகாரத்தினை அங்கு செலுத்த முற்பட்டு ஆதரவாளர்களுடன் மோதிக்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.
குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவரை நீக்குமாறு சந்திரகாந்தனால் வேண்டப்பட்டபோது, அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கு கைகலப்புகளும் ஏற்பட்டுள்ளது.
சந்திரகாந்தனின் அதிமிஞ்சிய தலையீட்டை விருப்பாத தமிழ்நேசன் எனப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர் ஒருவர் „நீங்கள் அடுத்தவாரம் லண்டன் பறந்துவிடுவீர்கள், ஆனால் நாம் இங்குள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்' எனக்கூறியபோது சிவநேசனின் சேட்கொலறினை பிடித்து சந்திரகாந்தன் தாக்க முற்பட்டதாகவும் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் சந்திரகாந்தனை தாக்க முற்படுகையில் மாவை அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாகவும் அறியமுடிகின்றது.
அதேநேரம் நேற்று முன்தின் கல்முனை ஆர் கே எம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வேட்பாளர் தெரிவின்போது கல்முனைபிரதேச ரெலோ அமைப்பாளரான ஹென்றி யினால் முன்யமொழியப்பட்ட வேட்பாளர் ஒருவர் சந்திரகாந்தனால் நிகாகரிக்கப்பட்டபோது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவ்விவாதங்களில் ஹென்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் வழற்சிக்காக பாடுபடுவதாகவும் , ஐரோப்பிய நாடகளுக்கு உல்லாசம் செல்லவில்லை என்றும் நாளை நீங்கள் லண்டன் பறந்து விடுவீர்கள் என தெரிவித்தபோது, ஆத்திரமடைந்த சந்திரகாந்தன் தனக்கு பாதுகாவலராக வந்திருந்த பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியை பறித்தெடுத்து ஹென்றியை சுட முற்பட்டதாகவும் உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்திரகாந்தனை மடக்கிப் துப்பாக்கியை பறித்தெடுத்தாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment