மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி
கொழும்பில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டுப் ஊடகவியலாளர்களை இன்றுகாலை அலறிமாளிகையில் சந்தித்துப்பேசிய ஜனாதிபதி அங்கு ஊடகவியலாளர்கள் சிலரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் வழங்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறுகையில், 'மீனவர்கள் எங்கு அதிகமான மீன்கள் கிடைக்கிறதோ அங்குதான் மீன்பிடிக்க விரும்புகிறார்கள். அவர்கள் சர்வதேச கடல் எல்லையை மதிப்பது இல்லை. இந்த பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண விரும்புகிறோம்.
அதே நேரத்தில், கடற்படை நடத்திய விசாரணையில், அவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது என்றார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து கூறுகையில், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க தயாராக இருக்கிறேன். இதுபற்றி பொதுவான ஒரு திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி தமிழர் கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்து இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
2 comments :
இதெல்லாம் இப்ப யாரு கேட்டது நம்ம அரசியல்வாதிகளுக்கு ஏதாவது பதவியோடு,"சவுண்டு"விட ஏதாவது அதிகாரமும் கொடுத்தாலே போதுமப்பா!!!
தமிழக மீனவர்களும்,வைகோ,சீமானும் தமிழக மீனவருக்கு சர்வதேச கடல் எல்லைகள் அற்ற எங்கும் மீன் பிடிக்கும் உரிமை வேண்டும் என்றும் போராட்டம் நடத்துவார்கள்.
Post a Comment