வான்நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்த புதிய சிஹல உறுமய தலைவர் கைதாகி விடுதலை.
புதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திர நேற்றிரவு வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு கொழும்பிலிருந்து வீடுநோக்கி முச்சக்கர வண்டியொன்றில் சென்றுகொண்டிருந்த சரத் மனமேந்திராவிடம் முச்சக்கர வண்டிச் சாரதி கொள்ளையிட முற்பட்டபோது அவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் வான்மீது சுட்டமை சட்டத்திற்கு புறப்பானது என கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பிரதேச மக்களின் ஒருமித்த வேண்டுதல் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
மனமேந்திராவின் துப்பாக்கிக்கான அனுமதிப் ப த்திரத்தினை கொண்டிருந்தபோதும் அவர் வான்நோக்கி சுட்டமை சட்டவிரோதமானது. எனினும் இவர் மீது வழக்கு தொடரப்படுமா என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.
0 comments :
Post a Comment