தேசிய கீதம் : மொழி பிரச்சினையாயின் இசையால் மட்டும் இசையுங்கள்- மல்வத்த பீடம்.
புதுவருடப்பிறப்பையொட்டி பிரதமர் டி.எம் ஜெயரட்ண மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரரான நியங்கொட விஜிதசிற அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்கு சென்றிருந்தபோது தற்போது நாட்டில் சர்சையை கிளப்பியுள்ள தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படவேண்டும் என்ற விவகாரம் குறித்து தேரர் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தேசிய கீதம் பாடப்படும் மொழி விவகாரம் குறித்து இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என வேண்டிக்கொண்ட மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரரான நியங்கொட விஜிதசிரி தேசிய கீதத்தை தமிழில் பாடுவதில் பெரும் சிக்கல் இருப்பின் தேசிய கீதத்தை இசையால் மட்டும் இசைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் அமைப்பினை மீறிச் செய்பட்டுவது நாட்டின் நல்லாட்சிக்கு பொருத்தமானது அல்லவெனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் இசைக்கும் போது மகா சங்கத்தினர் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமா இல்லையா என்பது பற்றி மகாநாயக்க தேரர்களுடன் ஆராயுமாறு அனுநாயக்க தேரர் பிரதமரை கேட்டுக்கொண்டார்.
இந்தியா போன்ற நாடுகளில் தேசிய கீதம் இசைக்கும் போது மகா சங்கத்தினர் உட்பட மத தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதாகவும் அதில் தவறு எதுவுமில்லை என்று அனுநாயக்க தேரர் இங்கு குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment