Thursday, January 6, 2011

வெள்ளைகொடி வழக்கு : அனுராதபுர தேர்தல் பிரச்சார உரையின் முழு பிரதி அவசியம்.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இரத்தினபுரியில் ஆற்றிய உரை அடங்கிய முழுமையான செய்தியறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தெரண தொலைக்காட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையிலான மூரடங்கிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இன்று இந்த வழக்கு விசாரணையில் கடந்த 2009 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இரத்திபுரியில் இடம்பெற்ற கூட்டத்தை ஒளிப்பதிவு செய்த தெரண தொலைக்காட்சியின் இரத்தினபுரி செய்தியாளர் கயான் குடாகம சாட்சியமளித்தார். இதனையடுத்து, செய்தியடங்கிய முழுமையான செய்தியறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யமாறு அரச தரப்பு சட்டத்தரணி பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனேக அலுவிகாரவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சரத் பொன்சேக்காவின் உரையடங்கிய வீடியோ பிரதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அவசியத்தை ஏற்றுக்கொண்ட பொன்சேக்காவின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி அந்த வீடியோவின் முக்கிய பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார். இதனால் வீடியோவின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, இன்றைய தினமே வீடியோ பிரதியை சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழங்குமாறு தெரண தொலைக்காட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் பிரதியொன்றை பொன்சேக்காவின் சட்டத்தரணிக்கும் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாளைய தினமும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com