இலங்கையில் ஏரிஎம் மெசின்களை தகர்த்த றொமேனிய தம்பதியினர்.
தகவல்களை களவாடும் உபகரணங்களின் உதவியுடன் இலங்கையிலுள்ள ஏரிஎம் மெசின்களில் கருவிகளை பொருத்தி கடன்அட்டைகளின் தரவுகளை சுரண்டி பெரும் மோசடியினை செய்த றொமேனியத் தம்பதியினர் இனம்காணப்பட்டுள்ளதுடன் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்பதியினர் எவ்வாறு இவ் மோசடியினை செய்தனர்?
றோமேனியாவைக் சேர்ந்த மேற்படி தம்பதியினர் இத்தாலி நாட்டிலுள்ள ரெஸ்ருறண்டு ஒன்றில் கடமை புரிகின்றனர். குறிப்பிட்ட ரெஸ்ருரண்டில் கடமைபுரியும் இலங்கையர் ஒருவருடன் நட்பு ஏற்படுகின்றது. அப்போது அவர்கள் தமது இலகு பணம் சம்பாதிப்பு தொடர்பாக பேசுகின்றனர். இலங்கையிலும் இவ்விதம் செய்ய முடியும் என இலங்கையர் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி குறிப்பிட்ட தம்பதியினர் இலங்கை வந்து இத்தாலியிலுள்ள இலங்கையரின் ஏற்பாட்டில் கல்கிஸை பிரதேசத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரு ஆடம்பர வீடுகளில் மாறி மாறி தங்குகின்றனர்.
இலங்கையிலுள்ள ஏரிஎம் மெசின்களை சென்று பார்வையிடும் இத்தம்பதியினர் ஏரிஎம் மெசின்களின் வடிவமைப்பை பதிவு செய்கின்றனர்.
ஏரிஎம் மெசினில் உட்புகுத்தும் அட்டைகளின் தகவல்களை பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் மெமொரி சேர்சிட் ஒன்றை நுழைத்து வைக்கின்றனர். இதற்கு பயன்படுத்தும் இந்த அட்டை ஏரிஎம் அட்டைவாயிலினுள் உட்புகுத்தப்பட்டிருக்கும், அட்டைகள் உட்புகுத்தப்படும்போது முதலாவதாக அட்டையின் மக்கனட் காட் றீடரில் உள்ள தகவல்களை பதிவு செய்து கொள்ளும். அதேரேம் இந்த உபகரணம் ஏரிஎம் மெசினின் மக்கனட் காட்றீடருடன் இணைப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட அட்டை எவ்வித சிரமமுமின்றி வழமைபோல் செயற்படும். ஆனால் பாவனையாளர்களுக்கு தமது அட்டையில் உள்ள தகவல்கள் யாவற்றையும் பிறிதொருவர் உறிஞ்சுகின்றார் என்பது தெரியவராது. இவ்வாறான தகவல்களை பதிவு செய்யும் சேர்கிட்கள் இரு மணித்தியாலங்கள் பதிவு செய்யும் கொள்ளவு கொண்டவை. இவற்றை படத்தில் காண்பது போல் மிகவும் நுணுக்கமாக நுழைவாயிலில் இருபக்கமும் ஒட்டிக்கொள்ளும் ரேப்பின் உதவியுடன் பொருத்தி வைக்கின்றனர்.
அத்துடன் அட்டைகளின் கடவு இலக்கங்களை பதிவு செய்வதற்காக மிகவும் சிறிய அதிஉணர்வுள்ள கமறா ஒன்று ஏரிஎம் மெசினினில் இலக்கங்களை பதிவு செய்யும் கீபோர்ட்டிற்கு நேர் மேலே பொருத்தப்பட்டிருக்கும். அது நபர்கள் காட்டுகளை உள்ளே செருகி இலக்கங்களை பதிவு செய்யும்போது வீடியோ செய்து கொள்ளும். இந்த கமராக்களும் இரு மணித்தியாலயங்கள் வீடியோ செய்யவல்லது.
டிசம்பர் நான்காம் திகதி வந்திறங்கிய தம்பதியினர் பொருத்தமான ஏரிஎம் நிலைகளை தேர்ந்தெடுத்து அதன் வடிவமைப்புக்கு ஏற்ப தமது உபகரணங்களை நான்கு நாட்களில் தயார் செய்து கொண்டு 8 டிசம்பரிலிருந்து தகவல்களை உறிஞ்ச தொடங்கி 4 நாட்களில் சுமார் 200 க்கு மேற்பட்ட அட்டைகளின் தகவல்ளை உறிஞ்சியுள்ளனர். இவ்வாறு உறிஞ்சப்பட்ட தகவல்கள் மின்னஞ்சல் ஊடாக இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 16ம் திகதியிலிருந்த இலங்கையர்களின் கடனட்டையில் இத்தாலி ஏரிஎம் மெசின்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ளவர்கள் தமது காட்டுகளில் இத்தாலியில் கொடுக்கல்வாங்கல் இடம்பெறுவதை தமது மினி ஸ்ரேட்மென்டுகள் ஊடாக உணர்கின்றனர். நிலைமையை வங்கிக்கு அறிவிக்கின்றனர். இவ்வாறு 150 மேற்பட்ட முறைப்பாடுகள் குவிந்துள்ளது. குறிப்பிட்ட அட்டைகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு இத்தாலி வங்கிகளுக்கு அறிவிக்கப்படுகின்றது. 20ம் திகதியுடன் காட்டுகள் யாவும் இத்தாலியில் தடுக்கப்படுகின்றது. அதே நாள் றொமேனியத் தம்பதியினர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோ எனப்படும் பணநோட்டு மோசடிப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கின்றனர். விசாரணைகள் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தொடர்பாக எவ்வித தடயங்களுமில்லாத நிலையில் குறிப்பிட்ட ஒரு கால எல்லையினுள்ள ஏரிஎம் மெசின்களின் சீசீரீவி பதிவுகளை பரிசோதனை செய்கின்றனர். இதன்போது வெள்ளையின தம்பதி ஒன்று ஆசிய நாட்டு நபர் ஒருவருடன் பல ஏரிஎம் மெசின்கள் அருகாமையில் அதிகம் நடமாடுவது அவதானிக்கப்படுகின்றது. யார் ? எதற்காக என்பதெல்லாம் எதுவும் தெளிவில்லை. ஆனால அவர்கள் குறுகிய சில மணி நேரங்களிலேயே உடைகளை மாற்றிக் கொண்டுள்ளமையும் தொப்பிகளை மாற்றிக்கொண்டுள்ளமையும் சந்தேகத்தை வலுச்செய்கின்றது.
இத்தாலி சென்ற மேற்படி தம்பதிகள் இத்தாலியிலிருந்து இலங்கைவந்த குடும்பம் ஒன்றிடம் இலங்கையில் தங்கியுள்ள தமது சகாவிற்கு நத்தார் பரிசு என பார்சல் ஒன்றை வழங்கியுள்ளனர். சகா நத்தார் பரிசை பெற்றுக்கொண்டதும் டிசம்பர் நான்காம் திகதியிலிருந்து அதே காட்டுகள் இலங்கையிலும் செயற்பட தொடங்கியுள்ளது. வங்கி அதிகாரிகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோவினரும் சகல ஏரிஎம் மெசின்களையும் கணனிகளுடாகவும் சீசீரிவி ஊடாகவும் அவதானிக்கின்றனர்.
சீசீரிவி யின் முன்னர் சந்தேகத்திற்கு உள்ளாகியிருந்த வெள்ளையின தம்பதிகளுடனிருந்த ஆசிய நாட்டவரின் நடமாட்டம் அவதானிக்கப்படுகின்றது. பல ஏரிஎம் மெசின்களிலும் ஒவ்வொரு மெசினிலும் ஒவ்வொரு உடை தொப்பியுடன் அவர் நடமாடுகின்றார். அவர் பணம் எடுக்கும் ஒவ்வொரு அட்டையும் மேற்படி மோசடிக்கு உள்ளானவாகளினது என்பது வங்கி தரவுகள் உறுதி செய்கின்றது. ஆனால் அவரை கைது செய்வதற்கு வாய்பில்லை நபர் சம்பந்தமான எந்த தகவல்களும் இல்லை.
டிசம்பர் 28ம் திகதி இரவு 10 மணியளவில் அழுத்கமவில் ஆரம்பித்த மேற்படி நபர் அதிகாலை 2 மணிவரை கல்கிஸை வரையுள்ள சகல ஏரிஎம் மெசின்களிலும் பதம் பார்த்துள்ளமை சீசீரீவி யில் பதிவாகியுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோ வினர் மறுநாள் 29ம் இதே வழியில் வருவார் என வலைவிரித்து காத்திருக்கின்றனர். ஆனால் அவர் அழுத்கமவில் ஆரம்பித்து மறு திசையில் காலி மாத்தறை கொக்கல என்று தனது கைவரிகையை காட்டுவது சீசீரீவி யில் பதிவாகின்றது. குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோவினருக்கு ஏமாற்றம்.
சீசீரிவியில் இவர் அடிக்கடி விழுகின்றார். ஆனால் ஒரு தடவைக்கு மேல் ஒரு மெசினுக்கு செல்வதில்லை. அவர் பணம் பெறும் காட்டுகள் யாவும் வங்கியினால் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவே காணப்படுகின்றது.
ஓரிடத்தில் காட் ஒன்றை நுழைத்து அதில் பணம் எடுக்காமல் அதிலுள்ள நிலுவையை மாத்திரம் பார்வையிடுவது சீசீரீவியில் பதிவாகின்றது. குறிப்பிட்ட காட் தொடர்பான தகவல்களை வங்கியிடம் பெற்றுக்கொள்ளும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோ வினர், வங்கி தகவல்களின் அடிப்படையில் காலி , குறுந்துவத்தை எனுமிடத்திலுள்ள ஒருவரது விலாசத்திற்கு செல்கின்றனர். அவ்வீட்டிற்கு சென்றபோது அவ்வீட்டில் யாரும் இல்லை. அயலவர்களிடம் விசாரணை செய்யபோது. குடும்பத்தினர் யாவரும் இத்தாலி நாட்டில் உள்ளவர்கள் என்ற தகவல் தெரியவருகின்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோவினர் சீசீரீவி யில் பதிவாகியுள்ள நபரின் படத்தினை காட்டி அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது அவர் குறிப்பிட்ட வீட்டின் குடும்பத்தில் ஒருவர் என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அண்மைக்காலமாக அவர் அந்த வீட்டிற்கு இரவு நேரங்களில் வந்து செல்வதை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்த இரு நாட்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோ வீட்டைச் சுற்றி பதுங்கியிருந்துள்ளனர். ஜனவரி 2ம் திகதி இரவு சுமார் 11.30 மணியவில் சொகுசு ஜீப் ஒன்றில் வந்திறங்கிய டிலுஸ எனப்படும் 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவரது வாகனத்திலிருந்து 77 கடனட்டைகள், குறிப்பாக சீசீரீவியில் பதிவாகியிருந்த பலவகை தொப்பிகள், உடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர் தங்கியிருந்த கல்கிசை வீட்டினை சோதனை செய்தபோது 9 மிமி கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடனட்டை மோசடி உலகில் உள்ள வங்கிகளுக்கு மிகவும் அச்சுறத்தலாக அமைந்துள்ள நிலையில் ஆசியாவிலேயே முதன்முயைறயா இவ்வாறானதோர் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. றோமானிய பிரைஜைகளான எலேனா அவரது கணவர் நாஸ் என்பரை மீது நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியினை குற்றப்புலனாய்வுப் பிரிவின் கவுண்டர் பீட் கரன்சி பீரோவினர் நாடியுள்ளனர்.
27 வயதான டிலுஸ விற்கு மோசடி மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தமைக்காக குறைந்தது 10 வருட சிறைத்தண்டனையுடன் தண்டமும் விதிக்கப்படும் என விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment