Friday, January 21, 2011

மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவா? இத்தாலி பிரதமர் மீது கோர்ட்டில் வழக்கு

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பெண்களை தன் வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுப்பது வழக்கம். அப்படி அவர் கொடுத்த விருந்தில் விபசார விடுதியில் நடனம் ஆடும் 17 வயது பெண்ணான கரீமா எல் மக்ரூக் கலந்து கொண்டார்.

அவர் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிப்பதற்கு போலீசாரிடம் பெர்லுஸ்கோனி தன் அதிகாரத்தை பயன்படுத்தினார். அப்போது தான் கரீமாவிடம் பணம் கொடுத்து செக்ஸ் உறவு வைத்து இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர் மீது மைனர் பெண்ணிடம் செக்ஸ் உறவு கொண்ட குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மிலன் மாஜிஸ்திரேட்டு இடா போக்காசினி விசாரிக்க இருக்கிறார். 61 வயதானவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com