பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு ஒசாமா மிரட்டல்
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேறாவிட்டால் அந்நாட்டு பிணைக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என்று அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மிரட்டல் விடுத்துள்ளார். அரபு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட பின்லேடன் பேச்சு அடங்கிய ஒலிநாடாவில், ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் படைகளை அந்நாட்டு அதிபர் சர்கோஸி வெளியேற்ற மறுப்பு பிணைக் கைதிகளை கொல்வதற்கு அளித்துள்ள சம்மதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் சர்கோஸி அமெரிக்காவுக்கு அடிபணிந்து விட்டார் என்றும் ஒசாமா கூறியுள்ளார்.
இதனிடையே பின்லேடன் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட தங்களது நேச நாடுகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்வதில் பிரான்ஸ் உறுதியாக உள்ளது என்று பிரான்ஸ் அயலுறவு அமைச்சர் மிச்சலி அலியட் மேரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜீரியாவில் பிரான்சை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 7 பேரை அல் கய்தாவினர் பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்களில் 2 பேரை அல் கய்தாவினர் கடந்த வாரம் கொன்றுவிட்டனர்.
0 comments :
Post a Comment