முனைப்பின் நிவாரணப்பணி தொடர்கின்றது.
சுவிஸ்ட்ஸர்லாந்தில இயங்கும் முனைப்பு சமூக அமைப்பு கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களை இன்றுமுதல் வழங்கத்தொடங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர். முதற்கட்டமாக பட்டிப்பளைப்பிரதேச செயலாளர் பிரிவில்உள்ள பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு முனைப்பின் அனர்த்த நிவாரணக்குழுவினர் நேரடியாகச்சென்று நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளதாகவும் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இக்கிராமங்களுக்கு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமையை தொடர்ந்து அப்பிரதேச மக்களின் பாராட்டுதலை தாம்பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வவுணதீவு வெல்லாவெளி, செங்கலடி கிரான், வாகரை பிரதேசங்களுக்கு;ம் ,அம்பாறை மாவட்டம், மூதூர் பிரதேசங்களுக்கும் பொருட்களை வழங்கி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முனைப்பு சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment