கூடுதலான சலுகைகளை பெறுவதற்கே சமாதான பேச்சிலிருந்து புலிகள் வெளியேறினர்:
கூடுதலான சலுகைகளைப் பெறுவதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதியுயர் இரகசிய இராஜதந்திர கேபிள் தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த பயங்கரவாத அமைப்பிற்கு போதிய சலுகைகளை வழங்கிய பின்னரும் மேலும் சலுகைகளை பெறவே சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதாக புலிகள் ஜப்பானிடம் கூறினர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் இதனை ஜப்பானிய சமாதான தூதுவர் அகாஸி மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் சிச்சிரோ ஒட்ஸ்சுகா ஆகியோரிடம் கூறினார்.
இதனை அன்ரன் பாலசிங்கம் கூறும்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் கூடவே இருந்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜப்பானின் சமாதானத் தூதுவர் அகாஸி, விடுதலைப் புலிகளை சமாதான பேச்சுக்கு திரும்புமாறும் ரோக்கியோவில் ஜூனில் நடக்கவிருந்த நன்கொடையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும்படியும் வற்புறுத்தினார். ஆனால் பிரபாகரன் பதிலேதும் கூறாமலே இருந்துவிட்டார்.
அகாஸி மனித உரிமைகள் விடயத்திலும் பிரபாகரனுக்கு அழுத்தம் கொடுத்தார். வடக்கு, கிழக்கின் மனிதாபிமானம் மற்றும் புனர்வாழ்வுக்கான உபகுழுவிலிருந்து வெளியேறியிருந்த புலிகளை மீண்டும் சேருமாறு பிரபாகரனுக்கு கொடுத்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. கூட்டத்தின் முடிவில் பிரபாகரன் அகாஸிக்கே தமிழீழத்தின் வரைபட சின்னத்தை கொடுத்தார்.
0 comments :
Post a Comment