கடற்படைத் தளபதி ஓய்வு பெறுகின்றார்.
இலங்கை கடற்படையின் தளபதி ரியட் அட்மிரல் திஸரா சமரசிங்க எதிர்வரும் 15ம் திகதியுடன் ஒய்வு பெறுகின்றார். அவர் ஒய்வு பெறும் தினத்திலிருந்து அட்மிரலாக பதவி உயர்வினையும் பெறுகின்றார். புதிய கடற்படைத் தளபதியாக ரியட் அட்மிரால் டி.டபிள்யூ.ஏ.எஸ் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெறும் கடற்படைத்தளபதி அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படலாம் என ஊடகங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment