Tuesday, January 18, 2011

புலிகள் இயக்கத்தை மீண்டும் கனடாவில் கட்டியெழுப்ப முயற்சி:

கனேடிய பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கைக்கு வெளியேயுள்ள தமிழ் போராட்டத் தலைவர்கள் தமது வன்முறை சார்ந்த பிரிவினைவாத இயக்கத்தை கனடாவில் மீண்டும் அமைத்து வருகின்றனரென கனேடிய பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்து வருவதாக 'த வன்கூவர் சன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

'இது எவ்வளவுக்கு வளர்ந்துள்ளதென்பது எமக்கு தெரியாது. ஆனால் நாடு கடந்த தலைமைக்கான தளத்தை இங்கு அமைப்பதே அவர்களின் நோக்கமென்பது தெளிவாகத் தெரிகிறது. சில தலைமைத்துவம் ஏற்கெனவே இங்கேயுள்ளன' என பொறுப்பான பதவியிலுள்ள அரசாங்க அதிகாரியொருவர் 'ஒட்டாவ் சிற்றிசன்'க்கு தெரிவித்தார்.

இரண்டு தென்கிழக்காசிய மனித கடத்தல் அமைப்புக்கள் இரண்டு கப்பல்களில் தமிழர்களை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு அனுப்புவதற்கான ஆயத்தம் செய்து வருகின்றனர் என்ற அறிக்கையோடு இந்த புலனாய்வு அறிக்கையும் சேர்ந்துள்ளது. புலனாய்வு மதிப்பீடுகளின்படி இந்த படகுகளில் 50 முன்னாள் புலித் தலைவர்கள், போராளிகள் இருக்கக் கூடுமென கணக்கிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com