சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கைக்கு அவபெயரை ஏற்படுத்தாதீர். ஜனாதிபதி
அரசாங்கத்தை விமர்சிக்கவும் ஆனால் சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை தொடர்பில் பொய்யான பிரசாரங்களைப் பரப்பி நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் பிரபாகரன் எதிர்பார்த்த ஈழத்தை யாருக்கும் கொடுக்க முடியாது எனவும் நாட்டில் இன சமத்துவத்தைப் பேண ஊடகங்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் இனங்களுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்:
0 comments :
Post a Comment