சிறிதரன் MP க்கு குற்றப்பத்திரிகை தயாராகின்றது! த:தே:கூ வின் நிலைப்பாடு என்ன? பீமன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கான குற்றப்பத்திரிகை தயாராகியுள்ளது என பொலிஸ்துறை வட்டாரங்களிலிருந்து நம்பகமாக தெரியவருகின்றது. வன்னியில் கணவனையிழந்த பெண்ணொருவர் உதவிகோரி பா.உ சிறிதரனிடம் சென்று தன் அவலங்களை கூறுகையில் அப்பெண்ணின் உடன்பாடு இல்லாமல் வீடியோ செய்து வீடியோ பிரதியை தனது சகோதரனின் இணையத்தளத்தில் வெளியிட்டு பணம்சேகரித்த தனிமனித உரிமை மீறல் குற்றத்திற்கான குற்றப்பத்திரிகை பா.உ சிறிதரனுக்கு வாசித்து காண்பிக்கப்படும் நாள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
புலிகளியக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து புலிகளின் லெப்.கேணல் தரத்தில் மரணித்த ஒருவரின் மனைவியான கலாறஞ்சனி தற்போது வாய்பேச முடியாத குழந்தை ஓன்றுடன் வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கின்றார். குறிப்பிட்ட பெண் தனது எதிர்கால வாழ்வில் நிரந்தர வருமானம் ஒன்றை பெறக்கூடிய அரச தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளும்பொருட்டு வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சிறிதரனிடம் சென்று தொழில் ஒன்றுவேண்டி தனது குடும்ப நிலைமையை மனந்திறந்து பேசியபோது அவரின் அந்த சோகம்நிறைந்த அவலத்தினை வீடியோ செய்த சிறிதரன் அவற்றை தனது சகோரனின் இணையமான லங்காசிறி ஊடாக சந்தைப்படுத்தி பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.
பணத்தினை விட சுயகௌரவம் மேலானது எனக் கருதும்பெண் தனது சோகம் சந்தைப்படுத்தப்படுவதை முற்றாக எதிர்த்ததுடன், குறிப்பிட்ட வீடியோவினை லங்காசிறியிலிருந்து அகற்றிவிடுமாறும், தனது சோகத்தை சந்தைப்படுத்தி நிதி சேகரிப்பதை நிறுத்துமாறும் வேண்டியுள்ளார்.
கலாறஞ்சினியின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வதாக சிறிதரன் உடன்படுகின்றார். சமநேரத்தில் விடயத்தினை வேறு ஊடகங்கள் அறிந்து கொள்கின்றன. சம்பவத்தில் கலாறஞ்சினிக்கு சிறிதளவேனும் உடன்பாடு இல்லை என்பதையும் அவர் தனது எதிர்ப்பதை தெரிவிக்கும் ஒலிப்பதிவுகள் , மற்றும் சந்தைப்படுத்தலை நிறுத்துமாறு அவர் சிறிதரனுக்கு கொடுத்த கடிதம் என்பவற்றை சில ஊடகங்கள் வெளியிட்டன. சிறிதரன் லங்காசிறி கூட்டு சந்தைப்படுத்தல் வெளிச்சத்திற்கு வந்தது.
கலாறஞ்சினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியது. சிறிதரனால் கலாறஞ்சினிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், அவர் தனது தற்காலிக இருப்பிடத்தை விட்டு மறைய வேண்டிய நிலை உருவானது.
விடயம் இலங்கை புலனாய்வுத்துறைக்கு எட்டியது. கலாறஞ்சினிக்கு உடனடியாக மறைமுக பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்த புலனாய்வுத்துறையினர் அவருக்கு சட்ட ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரியவருகின்றது. அதேநேரத்தில் இலங்கை பொலிஸ் துறையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தேர்ச்சி பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் ஒருவர் தலைமையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கலாறஞ்சினியின் வாய்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது கலாறஞ்சனியின் மனோவலிமையில் தங்கியுள்ளது. அவலங்களை சந்தைப்படுத்தும் இப்பேர்வழிகளுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு கலாறஞ்சனி பின்நிற்பாராயின் அது முழு சமுதாயத்தையும் பீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதிகாரிகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் பணியை முன்னெடுத்து சிறிதரனை சட்டத்தின் முன்கொண்டுவந்து சிறையில் அடைக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாகவுள்ளது. இவ்விடயத்தில் கலாறஞ்சினிக்கு உளவியல் தாக்கங்களை கொடுக்கவும் அச்சுறுத்தவும் சிறிதரன் பல்வேறுபட்ட கீழ்தரமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்துவருவதன் மர்மம் என்னவென்று புரியவில்லை.
சிறிதரன் 10 சகோதரர்களுடன் பிறந்தவர் அவருக்கு உறவினர்கள் பட்டாளம் ஒன்றே வன்னியில் உள்ளது. அவர்களில் சிலர் இணைந்து கலாறஞ்சினியின் வீட்டிற்கு கத்தி கோடாரிகளுடன் சென்று அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறன நடவடிக்கைளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் தகுதி அல்லது பக்குவம் உண்டா?
பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனில் நின்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என சிறிதரனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனையுமா அன்றில் அரசின் உயர்மட்டக் கதவினுள் பின்கதவால் நுழைந்து பத்தோடு ஒன்று பதினொன்றாக சிறிதரனையும் மன்னித்துவிடுங்கள் என தமது வழமையான சித்துவித்தைகளை காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்போதாவது வன்னி மக்களுக்கு த.தே.கூ உண்மை முகம் புரியும். VIII
0 comments :
Post a Comment