Saturday, January 22, 2011

யாழில் எந்தவொரு ஆயுதக்குழுவுக்கும் இடமில்லை. யாழ் இராணுவத் தளபதி.

எதிர்வரும் தேர்தல்களில் எந்தவொரு ஆயுதக்குழுவும் இடம்தரப்போவதில்லை என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ் அரசஅதிபர் அலுவலகத்தில் விசேடமாக இடம்பெற்ற அவசர ஒன்றுகூடலின்போது அவர் இதை தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் கொலைகள், கொள்ளைகள் மற்றும் கடத்தல்கள் போன்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று காலை யாழ். அரசாங்க அதிபர் செயலகத்தில் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற அவசர ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், அவர் அங்கு உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி சபை தேர்தல் நெருங்குவதால் யாழ்.மாவட்டத்தில் 24 மணி நேர மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ் . குடாவில் இராணுவச் சோதனைகள் அதிகரிக்கப்படும்;: தேவைப்படின் சோதனைச் சாவடிகளில் உடற்பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்பொருட்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து பாதுகாப்பை பலப்படுத்த விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் எந்தவொரு ஆயுதக் குழுக்களுக்கும் இடமளிக்கமுடியாது, யாழ். எந்தவொரு பாதாள உலக கோஷ்டிகளும் இல்லை. ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பும் சில நபர்களே கொள்ளைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். என்றார்.

இந்த மாநாட்டில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க, யாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பெரேரா, யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், பொலிஸ் அதிகாரிகள், வர்த்தக சமூகத்தினர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளன

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com