அமெரிக்க அரசின் ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" க்கு கிடைத்தது எப்படி?
அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது.
நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன.
இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு தலைமைக்கு அனுப்பிய 2,50,000 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், "விக்கிலீக்ஸ்" இணைய தளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்துவிட்டது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ' வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment