சன் சீ ஆட்கடத்தல் கப்பல் விவகாரம், பிரதான சந்தேக நபர் கைது.
எம்.வி. சன் சீ கப்பல் 492 இலங்கையர்களை பிரித்தானிய கொலம்பியத் தீவுகளுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைது செய்திருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதுடைய நடேசன் ஜீயநந்தன் என்பவரையும், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரையும் தாய்லாந்து அதிகாரிகள் அண்மையில் கைது செய்திருப்பதாக சர்வதேச செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட மேலும் பல இலங்கையர்கள் கப்பல்கள் மூலம் கனடாவுக்குள் நுழைய விருப்பதாக கனேடியப் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போதே முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதேநேரம் முன்னாள் புலிப் போராளித் தலைவர்கள் 50 பேர் உட்பட 400 தமிழர்கள் சட்ட விரோதமாக கனடா நுழைவதற்கு முயற்சிப்பதாக கனேடிய புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment