இந்திய வழங்க்கறிஞர் கைது : மறுக்கின்றார் இராணுவப் பேச்சாளர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரமான கயல்விழி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் இலங்கை ராணுவத்தால் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ப த்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியினை, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய மெதவல மறுத்துள்ளார். இவ்வாறான தனிப்பட்ட கைதுகள் தொடர்பாக தமக்கு இதுவரை எவ்வித தகவல்களும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்:
குறிப்பிட்ட வழக்கறிஞர் தனது உதவியாளருடன் இலங்கை சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் அவர்களின் விடுதலைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும் தந்திகள் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம் என பழ நெடுமாறன் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்:
0 comments :
Post a Comment