தமிழ் அரங்கம் சில சிறுகுழுக்களை கொண்டது. மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் அரசியல் கட்சிகள் யாவற்றையும் உள்ளடக்கியதோர் தேசியக் கூட்டமைப்பு எனவும் , தமிழ் அரங்கம் என அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டு சில தமிழ் சிறுகுழுக்களை அடக்கியது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் மண்டையன் குழுவின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அததெரணவின் நேர்காணல் நிகழ்சி ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தமிழ் அரங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் கொள்கையளவில் பேச்சுவார்த்தைகளை நடாத்தியதாகவும் , அவ்அரங்கத்தினுள் அரசின் பங்காளிக்கட்சிகளான ஈபிடிபி , ரிஎம்விபி என்பனவும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரங்கத்தில் சில சிறுகுழுக்கள் பங்கு கொள்வதாக தெரிவித்துள்ள மண்டையன் குழுவின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் , தான் ஈபிஆர்எல்எப் கட்சியின் மூன்று குழுக்களில் (ஈபிடிபி , சுரேஸ் அணி, நாபா அணி) ஒன்று என்பதை மறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேசியக் கட்சிகள் இணைந்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் சுரேஸ் பிரமேச்சந்திரன் தலைமை வகிக்கும் ஈபிஆர்எல்எப் மண்டையன் குழுவில் தற்போது எத்தனை அங்கத்தவர்கள் உள்ளனர் என்பதே கேள்வியாகும்.
அத்துடன் தமது கட்சி எதிர்வரும் வாரமளவில் ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் , அப்பேச்சுவார்த்தை தமிழ் மக்களுக்கு நன்மைகளை கொண்டுவரும் என கூறிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் சந்திப்பின்போது தமது மடிகளை நிரப்பிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடும் என்பதை சுரேசின் கொடுப்பு சிரிப்பு விழக்கியதாக உணரமுடிகின்றது.
1 comments :
It's the same old song,this will go on up to the edge of the infinity.Until we realize the truth,our falling into the tamil political illusions
are inevitable.
Post a Comment