மீட்ப்பு ப ணியில் ஈடுபட்டுள்ள STF னர் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளிலும் , அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதிலும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வீசேட அதிரடிப்படையின் நிர்வாக இயக்குனர் திரு. ஜெயசுந்தர அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, விசேட அதிரடிப்படையின் தளபதி, ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர் ஆகியோரின் பணிப்புரையின்பேரில் விசேட அதிரடிப்படையினர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனிதாபிமான பணிகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொழும்பில் அரசின் உல்லாச விடுதிகளில் இருக்கையில் இன்று படையினரே தமிழ் மக்களுக்கு உதவி செய்கின்றனர் என்ப து புலனாகின்றது.
0 comments :
Post a Comment