சுவிஸில் புலி முக்கியஸ்தர்கள் பலர் கைது. (இணைப்பு 2)
சுவிற்சர்லாந்து நாட்டில் புலிகளியக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களாக இயங்கியவந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் இக்கைதுகள் சுவிற்சர்லாந்து நாட்டின் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் மாநிலப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கைதுகள் தொடர்பாக சுவிற்சர்லாந்து நாட்டின் 10 மாநிலங்களில் 23 இடங்களில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு தடயங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்புரிமையை கொண்டிருந்தமை, அவ்வியக்கத்திற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்தமை, அவ்வியக்கத்திற்காக மக்களிடம் பணம் சேகரித்தமை, இலங்கை மக்களை பணத்திற்காக அச்சுறுத்தியமை, புலிகளியக்கத்திற்கு உதவுமாறு மக்களை கட்டாயப்படுத்தியமை போன்றன இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றங்கள் என அந்நாட்டின் தேசிய செய்தித்சேவை தெரிவித்துள்ளது.
மேலும் இவர்கள் நாட்டு மக்களிடம் சேகரித்த பணத்தினைக் கொண்டு பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு ஆயுதங்கள் வாங்கப்படடுள்ளதாகவும், சுவிற்சர்லாந்து நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் மூன்றாம் நாடு ஒன்றினூடாக சட்டத்திற்கு புறம்பாக சுவிற்சர்லாந்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சிறிதளவு பணம் வங்கிமூலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரி யவந்துள்ளது.
மேலும் இவர்கள் போலியான சம்பள கொடுப்பனவுச் சான்றுதல்களை தயாரித்து மக்களுக்கு வழங்கி அச்சாண்றிதல்களின் உதவியுடன் வங்கி கடன்களை பெற்றுக்கொண்டு, அப்பணத்தினை அபகரித்துக்கொண்டார்கள் என்ற குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.
கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தினை வெளியிட்டுள்ள சுவிற்சர்லாந்து தேசிய தொலைக்காட்சியின் இணையக்சேவை ' சுவிற்சர்லாந்தில் பெறப்பட்ட பணத்தில் பயங்கர ஆயதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது' எனக் குறிப்பிட்டுள்ளது. இப்படமும் அதன் கதையும் புலிகள் இப்பணத்தினை கொண்டு எவ்வாறன பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை அந்நாட்டு மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.
மாம்பழம், குலம், அல்பிரட், அப்துல்லா உட்பட 8 பேர்வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் கடந்த காலங்களில் புலிகளுக்கென தமிழ் மக்களிடமிருந்து பலகோடி பிராங்குகளை பெற்றிருந்ததுடன், புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அப்பணங்கள் இவர்களின் இருப்பிலிருந்தபோதும் அவற்றை சம்பந்தப் பட்ட மக்களிடம் பகிர்ந்தளிக்க தவறியமையமைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தனர். ஆனால் இம்முறைப்பாடுகளை செய்த மக்கள் தொடர்ந்து பொலிஸாருக்கு ஒத்துழைத்து இப்பயங்கரவாதிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதில் உறுதியுடன் செயற்படவேண்டும்.
0 comments :
Post a Comment