நிருபமா அவசரமாக இலங்கை வருகின்றார். இந்திய மீனவர் படுகொலையின் பின்னணி.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ், நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதாக இந்தியாவில் எழும்பியுள்ள எதிர்ப்பலைகளின் விளைவாகவர் அவரது பயணம் ஏற்பாடாகியுள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பது குறித்து அவர் இந்த விஜயத்தின் போது அரச தரப்பினருடன் நேரடியாக பேசுவார் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்களை படுகொலை செய்கின்ற, இலங்கை கடற்படையை இயக்கும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும், இனி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டால், அதற்கு இந்திய அரசே பொறுப்பு என வலியுறுத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும், தமிழக மீனவர்களின் துயரத்தில் பங்கு ஏற்கவும், என இந்திய நாகப்பட்டினத்தில் பிப்ரவரி 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கழகப் பொதுச் செயலாளர் வைகோ, தலைமையில் ம.தி.மு.க. உண்ணாநிலை அறப்போரை மேற்கொள்கிறது என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.
0 comments :
Post a Comment