தமிழ் அரசியற் தலைமை என்பது என்ன? லெனின் பெனடிக்ற்.
தமிழ்மக்களுக்கான அரசியற் தலைமை என்று வந்தால் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் இந்நாளில் தமிழ் தேசியக் கூடடமைப்பினரையும் குறிப்பிட வேண்டும். இதில் விஷேடமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்குப் பிரதேசத்தில் எவ்வித பொருளாதார அபிவிருத்தியையும் முன்னெடுக்காமல் ஆளும் அரசுக்களைக் குறைகூறி மட்டுமே அரசியல் நடாத்தி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துப் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்தவர்கள் என்றபெருமை இவர்களையே சாரும்.
அதைவிடவும் விஷேடமாக எதையுமே இந்தக் கூட்டம் செய்யாது என்று சந்தேகமறத் தெரிந்தும் இதே கூட்டத்தை மீண்டும் மீண்டும் பலமுறை பாராளுமன்றப் பிரதிநிதிகாளாகத் தேர்ந்தெடுத்த பெருமை வடகிழக்கு மக்களையே சாரும். அதுவே இலங்கைத் தமிழ் மக்களின் இழந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான தகுதியினதும் தகுதியின்மையினதும் உரைகல்லாகும்.
சமீபகாலமாக சிலபத்திரிகை ஊடகவியலாளர்கள் அல்லது வேறுவிதத்தில் சொன்னால் தமிழ் தேசியவாதிகள் திடீரென ஒரு வேகத்தில் இலங்கை அரசு, கூட்டமைப்புடனேயே கதைக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களின் சார்பாக பாராளமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்று தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவபடுத்தபவர்கள் இவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுடன் பேசுவேண்டும் என்ற ஆணித்தரமான வாதத்தை முன்வைத்து பிரசாரத்தைத் தொடங்கியுள்னர்.
ஆனால் இதே கூட்டமைப்பு புலிகள் இருந்தகாலத்தில் அரசியல் தீர்வு என்றால் அரசாங்கம் புலிகளுடன் மட்டும்தான் பேசவேண்டும என்றும் ஆயுதம் வைத்திருக்கும் அவர்களோடு பேசினால் தான் அரசாங்கம் ஏமாற்றாது என்றும் தங்களுடன்பேசினால் ஏமாற்றிவிடும் என்றும், நாங்கள் தமிழ்மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் மட்டுமே என்றும் கூறி புலிகளை ஏக அரசியல் தலைமையாக அடையாளம் காட்டினர்.
அதாவது அரசியல்ரீதியாக தமிழ்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பினர், தாங்கள் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல, ஆயுதம்தரித்த புலிகளே தமிழ் மக்களின் அரசியல் உரிமைபற்றி கதைக்க உரிமையுள்ளவர்கள் என்பதே இதன் சாராம்சம்.
இதை இந்தக் கூட்டமைப்பினரே எந்தவித ஊசலாட்மும் இன்றி எண்ணற்றமுறை தற்செயலாகக்கூட நாப்பிறளாமல் திருவாய் மலர்ந்துள்ளனர். வேறுவிதமாகச் சொல்வதென்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் தீர்வு பற்றிக் கதைப்பதற்கு தங்களுக்குத் தகுதியில்லை அல்லது அதிகாரம் இல்லை என்றுதானே அர்த்தங்கொள்ளலாம். மிக வெளிப்படையாகச் சொல்வதென்றால் புலிகளின் மிரட்டலுக்குப் பயந்து தங்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள தமிழ் கூட்டமைப்பு என்று இந்நாளில் கூறப்படும் தமிழ்தலைமை தங்களுக்குத் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட அரசியல் ஆணையை மற்றும் உரிமையை உதாசீனம் செய்தார்கள் என்பதே உண்மை.
இப்படிப்பட்டவர்கள்தான் தமிழ்த் தலைமையா? அன்று புலிகள் மிரட்டியதால் தங்களுக்குத் தமிழ்மக்களால் அளிக்கப்பட்ட ஆணையை அவமதித்தவர்கள் இன்று ஆழும் அரசாங்கம் மிரட்டினால் உயிருக்குப் பயந்து அதே அரசியல் ஆணையை உதாசீனம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இது இப்படியிருக்க இன்று இந்தத் தமிழ்மக்களின் அரசியல் உரிமை மற்றும் தீர்வு சம்பந்தமாக அரசாங்கம் பாராளுமன்ற ஜனனாயக முறைமையின் கீழ் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கூட்டமைப்புடன் பேசுவதே ஜனனாயகம் என்று உரிமைக் குரல் எழுப்பியுள்ள பத்திரிக்கை ஊடகவியலாளரைக் கேட்கிறேன்,
இதே காரணத்தை புலிகள் இருந்த காலத்தில் உரத்துச் சொன்னதுண்டா? அல்லது வாய்தடுமாறியாவது சொன்னதுண்டா?
தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் மட்டுமே அரசியல் தீர்வு அரசியல் உரிமைபற்றிப் பேசவேண்டும். ஆயுதம் தரித்த புலிகளுடன் அல்ல என்று அடித்துச் சொன்னதுண்டா?
திடீரென்று இப்போதுமட்டுமென்ன பாராளுமன்ற ஜனனாயகப் பாசம்: அல்லது கூட்டமைப்புக்குக் கொடி பிடிப்பு. கூட்டடைப்புக்குக் கொடிபிடிப்பு என்ற போர்வையில் ஆளும் அரசுக்கு ஆராதனையோ?
எல்லாமே உலகமயமான இந்நாளில் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? யார் இதன் சூத்திரதாரிகள்? என்பதும், இதனால் யார் அரசியல் ஆதாயம் அடைவார்கள் என்பதும், யேசுகிறீஸ்துவுக்கே வெளிச்சம்.
1 comments :
“The fruits of one tree, and the leaves of one”
"He is unique; this world couldn't tolerate him"
“We are all waves of one sea”"We shall meet again in Tamil Eelam"
http://www.youtube.com/watch?v=HHLloZXXkpE
Post a Comment