அம்பலமாகப் போகும் இலங்கை அரசியல்வாதிகளின் அந்தரங்கங்கள்.
இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் சிலர் சுவிஸ் வங்கிகளில் பேணி வரும் கணக்கு விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட வுள்ளதாக தி சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது.சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் விரைவில் இந்தத் தகவல்களை வெளியிட உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் இரகசிய கணக்கு விபரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. இந்த கணக்கு விபரங்களில் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் சிலரின் கணக்கு விபரங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தப் பட்டியலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளா அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறித்து அறவிக்கப்படவில்லை.
இந்தத் தகவல்களினால் சில அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து தனியார் வங்கியொன்றின் உயர் அதிகாரி ராடொல்ப் எல்மர் என்பவரினால் இந்தத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தரவுகள் விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்கீயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment