ஈபிடிபி தேர்தலில் பங்கு கொள்ளத்தடை.
உள்ளுராட்சித் தேர்தல்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் பங்குபற்ற முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. கட்சிகளினுள் காணப்படும் உட்பூசல்களை கருத்தில்கொண்டே இம்முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ள தேர்தல் திணைக்களம், மேலும் 3 கட்சிகளை இதே காரணத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முடியாத கட்சிகளாக பட்டியலிட்டுள்ளது.
முற்போக்கு முன்னணி,
முஸ்லீம் விடுதலை கட்சி,
தேசிய அபிவிருத்தி முன்னணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈபிடிபி போட்டியிட்டிருந்தது. அத்துடன் கடந்த காலங்களில் அவர்களை ஓரம்கட்டும் பல நிகழ்வுகளை முன்னெடுத்துவந்தமையை உணரக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் ஜனநாயகமுறையில் தேர்தல் ஒன்றில் பங்குபற்றுவதற்கான உரிமைக்கு ஆப்பு வைத்துள்ளமை அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள் யாவற்றையும் முற்றிலும் முடக்கும் செயல்பாடாகவே கருதப்படுகின்றது.
அதேநேரம் யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தியது.
வடக்கில் சட்டம் ஒழுங்கு முற்றாக சீர்குலைந்து கொலைகள், கடத்தல்கள், கப்பம் வசூலித்தல் உட்பட ஏனைய குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கூறிய த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒவ்வொரு சம்பத்திலும் குற்றவாளிகள் தப்பிச்செல்ல முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment