Tuesday, January 18, 2011

துனீசியா ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் நாட்டை விட்டு ஓட்டம் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றன

ஆபிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அரபு முஸ்லிம் நாடான துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி – Zein al-Abideen Bin Ali- துனீசியாவில் இருந்து ஓடித்தப்பி சவூதி அரேபியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த தகவலை சவூதி மன்னர் அரசு கடந்த சனிக் கிழமையன்று 14.01.2011 உறுதி செய்துள்ளது.

வேலை இல்லாமை ஊழல், பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களுடன் சமூக சீர்கேடுகள் ,விபச்சாரம் , மதுபாவனை போன்றவற்றுகான அரசின் அனுமதி போன்றவைகள் மக்கள் வீதிக்கு வந்து கிளர்ச்சி செய் தூண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்த மக்கள் புரட்சி சவூதி ,எகிப்பது , போன்ற அரப்பு நாடுகளின் அரசியல் தலைமைகளை ஆட்டம் காண செய்துள்ளதாகவும், துனீசிய மக்கள் புரட்சி போன்று ஏனைய அரபு நாடுகளிலும் ஏற்படலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர். -The revolution of the Tunisian people has left many Arab leaders panicking,” said political analyst Sami al-Buhairi. “What happened to Bin Ali was an unprecedented humiliation for an Arab leader.”-

இந்த அரசுக்கு எதிரான கிளர்ச்சி ஒரு படித்த ஏழை வாலிபனின் மரணத்துடன் துடக்கி துனீசிய நாட்டுக்கு விடிவை ஏற்படுத்தும் கதவுகளை திறந்துள்ளது. தனது வறுமையை போக்க தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமையால் நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்த 26 வயதேயான பட்டதாரி இளைஞன் ஒருவன் போலிஸ் அனுமதி பத்திரம் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான் என்று தெரிவிக்கபடுகின்றது. இந்த வாலிபனின் மரணம் தற்போதைய கிளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சியில் வதைக்கப்பட்டுகொண்டிருந்த மக்கள் ஒன்று திரண்டார்கள்.

துனீசியா, அரபு நாடுகளில் கல்வி அறிவு கொண்டது என்று அறியப்பட்டது 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்தவர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி. இவர் 1987ஆம் ஆண்டு நடத்திய இராணுவப் புரட்சி மூலம் துனீசியாவின் ஜனாதிபதியாக தன்னை அறிவித்து கொண்டார். அதன் பின்னர் தேர்தல்கள் மூலம் தனது இருப்பை பாதுகாத்து கொண்டார் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 89 சதவீத வாக்குகளைப் பெற்று ஐந்தாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தற்போது நாட்டை விட்டும் ஓடிவிட்டார்.

மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க போலீஸ் மற்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் 23 பேர் பலியானார்கள். தொடர்ந்து கிளர்ச்சி அதிகரிக்கவே ஜைனுல் ஆபிதீன் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று துனீசியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து துனீசியாவின் ஜனாதிபதியாக தானே செயல்படுவேன் என்று பிரதமர் முஹம்மது கன்னோஷி வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார். ஆனால், தேர்தல் மூலம் வேறு ஒரு அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் தலைவர் அதிபர் பதவி வகிப்பார் என்று துனீசிய அரசியல்சாசன நீதிமன்றத் தலைவர் அறிவித்துள்ளார். அரசியல் சாசன நீதிமன்றத் தலைவர் வேறு ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அங்கு இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவற்றுள் ஹிஸ்புத் தஹ்ரீர் கட்சி தனது போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

M.ரிஸ்னி முஹம்மட்




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com