நாமல் ராஜபக்ச சிறந்த சமூகசேவகன். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.
இலங்கை வந்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அதிபர் ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச சிறந்த சமூக சேவை செய்வதாக பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். 2600 மாவது ஆண்டு புத்த ஜயந்தியை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாளை அமைப்பும், வாழும் கலை அமைப்பும் இணைந்து அறநெறி நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்துள்ளன. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பெங்களூரிலிருந்து கொழும்பு வந்திருந்த வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜியும் பங்கேற்றார்.. அப்போது இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாக பாராட்டு தெரிவித்த ரவிசங்கர் குருஜி, அவருக்குப் பொன்னாடை போர்த்தினார்.
வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்தாலோசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment