வெள்ளத்தில் தத்தளிக்கும் உறவுகளுக்கு உதவுவோம். உதயம்
அன்பார்ந்த உறவுகளே!
எமது மண்ணில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகி இருக்கும் உறவுகளுக்கு உதவவேண்டிய உன்னதமான கடமை புலம் பெயர்ந்த எம் எல்லோருக்கும் இருக்கின்றது. வீடுவாசல்களை விட்டு வெளியேறி, உடுத்த உடையோடு, உண்ண உணவின்றி அல்லற்படும்
எம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வாருங்கள் என்று உதயம் உங்களை அழைக்கின்றது.
ஆலயங்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் பொதுக்கட்டிடங்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் போன்றவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. அவர்கள் சொந்த இடங்களுக்கு விரைவில்
திரும்புவதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை. பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் எமது பிள்ளைகள் வெறும் கையோடுதான் செல்ல வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான நிலையில் எம்மவர்க்கு உதவ முன்வாருங்கள் என்று எப்போதும் போன்று இப்போதும் உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
உதயம் உறவுகள் உங்களை நாடிவருகின்றார்கள். உங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம் உங்கள் ஆதரவிற்கு உதயத்தின் நன்றிகள்.
அன்புடன்
உதயம் நிர்வாகம்
வங்கிக்கணக்கு விபரம்:
Uthayam, Post Finance 60-660726-1, 6005 Luzern
IBAN CH 83 0900 0000 6066 0726 1
0 comments :
Post a Comment