மர்மமாக தூக்கில் தொங்கினார்: நடிகை ஷோபனா கொலையா?
பிரபல நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று தூக்கில் தொங்கி இறந்தார். இவருக்கு வயது 32. காமெடி நடிகர்கள் வடிவேலு, வெண்ணிறஆடை மூர்த்தி போன்றோருடன் ஜோடியாக நடித்துள்ளார். ஜில்லுன்னு ஒரு காதல், சுறா என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரீலிசாகும் இளைஞன், சிறுத்தை படங்களிலும் நடித்து இருக்கிறார். ஷோபனாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தாய் வைரம் ராணியுடன் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை வைரம்ராணி மார்க்கெட் போய்விட்டார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது ஷோபனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
கதவு லேசாக திறந்த நிலையில், சங்கிலியால் கோர்க்கப்பட்டு இருந்தது. வெளிப்பக்கத்தில் இருந்து திறக்கும் வகையிலேயே கதவு மூடப்பட்டு இருந்தது. தாய் வைரம்ராணி வெளியில் இருந்தே கதவை திறந்து மகள் பிணமாக தொங்குவதை பார்த்தார்.
ஷோபனாவை ஒருவர் காதலித்து ஏமாற்றியதாக வைரம்ராணி கூறினார். அந்த நபருடன் ஷோபனாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஷோபனாவை கடைசியாக பார்த்தபோது அவர் மனதில் சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை என்றும் வைரம்ராணி கூறி இருக்கிறார்.
இதன்மூலம் தற்கொலை சிந்தனை அவரிடம் இல்லை என்பது தெரியவருகிறது. எனவே, சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற ஐயப்பாடு கிளம்பி உள்ளது.
ஷோபனாவிடம் நெருக்கமாக பழகியவர்கள்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் யார் என்றும் விசாரணை நடக்கிறது. ஷோபனா பல படங்களில் நடித்தாலும் குறைவான சம்பளமே தரப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் குடும்பத்தை நகர்த்த முடியாமல் அவதிப்பட்டாராம். வறுமை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஷோபனாவின் மர்மசாவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் நடித்தவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஷோபனாவை காதலித்து ஏமாற்றியவர் ஒரு நடிகர் என்று பேசப்படுகிறது.
அவர் யார் என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.
0 comments :
Post a Comment