கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் விதவை மனைவிகள் தற்கொலைதாரிகளாக மாற்றமா?
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர். 132 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மாஸ்கோவின் டிமானிடோவோ விமான நிலையத்தில் பயணிகள் போல் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 35 பயணிகள் உயிரிழந்தனர். 132 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தற்கொலைப் படை தாக்குதலால் விமான நிலையம் உடனடியாக சீல வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்கொலைப் படை தாக்குதலில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளை சேர்ந்த பயணிகளும் உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம் இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர் ஒரு பெண் என்று தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியது ஒரு பெண் என்ற விவரம் தெரியவந்து உள்ளது. கருப்பு நிற முழு ஆடை அணிந்த பெண் ஒருவர், தன்னுடன் பெரிய சூட்கேசை கொண்டு வந்ததாகவும் குண்டுவெடிப்புக்கு பிறகு அந்த பெண் முற்றிலும் சிதைந்து போனதாகவும் கூறப்படுகிறது.
காக்கசஸ் பகுதியில் கொல்லப்பட்ட ரஷ்ய தீவிரவாதிகளின் விதவை மனைவிகள் தீவிரவாதிகளாக மாறியுள்ளமை பற்றி பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு ஏற்கனவே தெரிந்துள்ளது.
ஆனால் இந்தத் தாக்குதலை ஆண் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று தவறாக முடிவு செய்யப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலை நேரில் பார்த்த ஒரு சாட்சியம் தொலைக்காட்சி ஒன்றில் கூறும்போது தாக்குதலுக்கு முன்பு அந்தப் பெண் தீவிரவாதி 'உங்கள் அனைவரையும் கொல்வேன்.' என்று கத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு விமான நிலையநிர்வாகமே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என றஷ்ய ஜனாதிப குற்றஞ்சுமத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment