போலி அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்ற ஈபிடிபி நபர் கைது.
யாழ்ப்பாணம் கன்னியர்மடப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது சந்தேகம்கொண்ட பொதுமக்கள் அவரை இராணுவத்தினரின் உதவியுடன் மடங்கிப்பிடித்தனர். பிடிபட்ட நபர் வவுனியா ஈபிடிபி உறுப்பினர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளமையும், அவரினால் விற்பனை செய்யப்பட்ட சீட்டுக்கள் யாவும் போலியானவை எனவும் தெ ரியவந்துள்ளது.
இவர் குறிப்பிட்ட பிரதேசத்தில் கொள்ளையில் ஈடுபடும்நோக்கில் உளவு வேலைகளுக்காக சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தாகவும், அவரின் நடமாட்டம் பிரதேசமக்களுக்கு பாரிய சந்தேகத்தை கொடுத்திருந்துடன் மக்களின் துணிச்சலான செயற்பாடு யாழ் படையினருக்கு உத வியாக அமைந்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்பாணத்தில் உருவாகியுள்ள அசமந்தநிலை மற்றும் கொள்ளை நடவடிக்கைகளை நிறுத்துமாறு பாராளுமன்றில்வேறு அமைச்சர் வேண்டு கோள் விடுத்திருந்தமை யாவரும் அறிந்ததே.
0 comments :
Post a Comment