இலங்கையை அச்சுறுத்திய அமெரிக்கா
ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்யுமாயின் பெரும் பாதிப்பை தரவல்ல வர்த்தக தடைகளை மேற்கொள்ள நேரிடும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையை அமெரிக்கா அச்சுறுத்தியதாக இரகசியமான அமெரிக்க கேபிள் ஒன்று தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி ஒஸ்லோ பத்திரிகையொன்றான அப்ரன்பொஸ்ரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கனை கொள்வனவு செய்வதற்கான பொறுப்பிலிருந்த இலங்கை கம்பனி, ஆர்.பி.ஜி – 7 ரக லோஞ்சர்களையும் மல்ரி பரல் ஏவுகணை செலுத்திகளையும் வட கொரிய ஆயுத கம்பனியிடமொன்றிலிருந்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதாக அண்மைக்கால புலனாய்வு அறிக்கைகள் காட்டுவதாக கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 8 என திகதியிடப்பட்ட ஒரு கேபிள் கூறுகிறது.
இப்படியான ஆயுத கொள்வனவுகள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிரானவை என்றும் அந்த கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தாம் சட்டத்துக்கு விரோதமான ஆயுத கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுடவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் இதை நம்பவில்லை. அவர் இது தொடர்பில் எதுவும் பேசவுமில்லை என்றும் அந்த கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அப்ரன்பொஸ்ரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment