Monday, January 3, 2011

தண்ணீரால் ஓடும் கார் தயாரிக்கும் முயற்சியில் டாட்டா நிறுவனம்.

இந்தியாவில் வாக னங்கள் வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பெட்ரோல் தான் கட்டுபடியாகவில்லை. இதற்காக டாட்டா நிறுவனம் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது. பெட்ரோலுக்குப் பதிலாக தண்ணீரில் இயங்கக் கூடிய கார்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கார்கள் எல்லாரும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ கார்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இப்போது தண்ணீரைப் பயன்படுத்தி இயக்கப்படும் கார் களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தண்ணீரால் ஓடும் காரை வெற்றி கரமாக தயாரிக்க அமெரிக்க தொழில்நுட்பம் ஒன்றை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்துலக கார் சந்தையில் இந்தக் காருக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com