சுவிஸில் உள்ள வர்த்தக நிறுவனங்களால் ஒழுங்கு செய்யபட்ட மோசடி புத்தாண்டு விழா!!
சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் நகரில் பல்வேறுபட்ட வர்தக ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்து, புத்தாண்டை முன்னிட்டு ‘புத்தாண்டும் புது நிமிர்வும்’ என்ற ஓர் நிகழ்சியை (விழா) 01.01.2011 அன்று நடத்தவிருப்பதாகவும், அந்த நிகழ்சியில் சீமான், சிலம்பரசன் போன்ற முக்கியஸ்தாகள் கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறி லங்காசிறி போன்ற இணையதளங்களில் விளம்பரம் செய்தும், சுவிஸில் உள்ள அனைத்து தமிழ் வர்தக ஸ்தானங்களிலும் மற்றும நேரடியாகவும் ரிக்கற்றுக்களை விற்றுவிட்டு காசுகளை வாங்கிக்கொண்டு, கடைசி நேரத்தில் சீமான், சிலம்பரசன் போன்றோர் வரமாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள்.
சீமான், சிலம்பரசன் போன்றோர் கலந்துகொள்ளாதமைக்கு பல்வேறுபட்ட பொய்யான காரணங்கள் காட்டியிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாது முழு வியாபார நோக்கோடு செய்யபட்ட இந்த நிகழ்சியை இன விடுதலைபோராட்டத்தோடு வேறு சம்பந்தபடுத்தியும், சீமான், சிலம்பரசன், வராமைக்கு காரணம் கர்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் நடத்தவிருந்த நிகழ்சிக்கு சீமான், சிலம்பரசன் போன்றோர் கலந்துகொள்ளாமைக்கு வல்லரசுகளின் அல்லது இலங்கையரசின் சூழ்சியாக இருக்குமோ?
எது எப்டியோ, சீமான் போன்ற பொய்யர்கள் இங்கு வந்து பொய்க்கதைகளை புலம்பெயர் தமிழர்களிடையே அவுழ்த்துவிட்டு புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணத்தை சூறையாடிக்கொண்டு போகவிருந்த சந்தர்ப்பம் நழுவிபோனமையையிட்டு நாம் சந்தோச படவேண்டும். சீமான், சிலம்பரசன் போன்றவர்களுக்கு படமெடுக்க பலகோடி ரூபாய்கள் இப்பொழுது தேவைப்படுகிறது. அந்த காசை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து எப்படியாவது வாங்கிடலாம் என திட்டம்போடுகிறார்கள்.
சீமான், சிலம்பரசன் போன்ற சில்லறை சினிமாக்காரர்களை வெளிநாடுகளுக்கு கூப்பிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு காட்டி அவர்களிடமிருந்து எப்படியாவது பணத்தை சம்பாதிக்கலாம் என இங்குள்ள வர்தக ஸ்தாபனங்களும் பல்வேறு பட்ட முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்
இப்படிபட்ட வர்தக நிறுவனங்களால் நடத்தப்படும் மோசடி திருவிளையாட்டுகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொண்டு, இனிமேலும் இந்த மாதிரியான ஏமாற்று நிகழ்சி ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளல்வேண்டும்.
‘புலம்பெயர் தேசமெங்கும் தமிழர்களை எப்படியாவது ஏமாற்றி பிழைக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் திட்டம்போட்டுக்கொண்டு திரிகிறார்கள்’ அதனால் புலம்பெயர் தமிழர்களே திரும்பவும், திரும்பவும் ஏமாற்றுபவர்களிடம் ஏமாறாமல் விழித்துக்கொள்ளுங்கள்.
‘புத்தாண்டும் புது நிமிர்வும்’ என்ற நிகழ்சிக்காக நீங்கள்கொடுத்த பணத்தை திருப்பி வாங்க முனையுங்கள்.
நன்றி.
ஊர்க்குருவி
0 comments :
Post a Comment