இலங்கை: 400,000 பிள்ளைகளுக்கு உணவில்லை
இலங்கையில் வெள்ளம் காரணமாக 400,000 சிறார்கள் போதிய உணவின்றி தவிக்கும் பேரிடரை எதிர்நோக்குவதாகச் சிறார் அறப்பணி அமைப்பு ஒன்று எச்சரித்து இருக்கிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவதற்காக அந்த அமைப்பு ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் நிதி திரட்டுகிறது.
வெள்ளத்தால் தங்கள் இருப் பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற 350,000 மக்களில் பலர், வெள்ளம் வடிந்ததை அடுத்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்து இருந்தது. தங்கள் வீடுகள், பள்ளிக் கூடங்கள், பயிர்கள், கால்நடை கள் எல்லாம் பறிபோயிருந் ததைக் கண்டு அவர்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள் என்று ‘சிறார்களைக் காப்போம்’ என்ற அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
பலரின் வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதால் அவர்கள் சாலையோரத்தில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்க வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. வெள்ளத்தால் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாநிலத் தில் வேளாண்மை நிலம் பாழாகி ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு 400,000 சிறார்களுக் குப் போதிய உணவு இல்லை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 51 மில்லியன் டாலர் (31 மி ஸ்டெர்லிங்) தேவை என்று ஐநா அமைப்பு குரல் கொடுத்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.நா.வின் மனிதாபிமான உதவிப் பணி களுக்கான தலைமைச் செயலர் கேதரின் ப்ராக், இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற் கொண்டு வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டார். இலங்கை அதிகாரிகளுடன் பலவற்றையும் அவர் விவாதித்தார்.
“முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உலர் உணவும் தேவையான ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. “பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. “முழுமையாகவும் பகுதியள வாகவும் சுமார் 31,000 வீடுகள் அழிந்துள்ளன.
“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15,000 ரூபாவும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10,000 ரூபாவும் வழங்கப்பட்டன,” என்று இடர் துடைப்புத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
0 comments :
Post a Comment