இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? தீர்ப்பு 25 இல், கோட்டாவுக்கும் அழைப்பாணை.
இராணுவ நீதிமன்றம் அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்த நீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதி வழங்கப்படவுள்ள அதேநேரத்தில் வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளிக்கவருமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் நீதிமன்று அழைப்பாணை விடுத்துள்ளது.
இராணுவ சேவையில் இருந்தவண்ணம் அரசியலில் ஈடுபட்டார், ஆயுதக்கொள்வனவுக்கான அனுமதியினை தனது மருமகனின் நிறுவனத்திற்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவக் குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவிற்கு 3 வருட கடுழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பின் பிர காரம் அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார். இராணுவ நீதின்றின் தீர்ப்பிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்த முன்னாள் இராணுவத் தளபதி இராணுவ குற்றவில் நீதிமன்று இலங்கையின் பாராளுன்ற சிறப்புரிமை மற்றும் அரசயல் யாப்பிற்கு அப்பாற்பட்டது எனவும் தனது பாராளுன்ற ஆசனம் ரத்து செய்யப்பட்டமைக்கு இடைக்கால தடைஉத்தரவு வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு தொடர்பிலான தீர்ப்பு உயர்நீதிமன்றிற்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 25ம் திகதி உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் டி சில்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த தினத்திற்கு வழக்கு சார்ந்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவர்களுக்கு முன்னறிவித்தல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ நீதிமன்றம் அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பது குறித்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.
சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை செய்யக் கோரி உயர் நீதிமன்றிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் சரத் பொன்சேகாவிற்கு எதிரான வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செயலாளர் நான்காவது சாட்சியமாக அழைக்கப்பட்டுள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணைகளின் போது வழக்கில் அடுத்த சாட்சியமாக போட்டாபய ராஜபக்ஷ் அழைக்கப்பட வேண்டும் என அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.
அதனால் பாதுகாப்புச் செயலாளருக்கு முன்னறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்புமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த கருத்துக்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு முன்னறிவித்தல் கடிதம் விடுத்துள்ளது. இதன் பின்பு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment