கிழக்கு மாகாணத்தில் 15 புதிய விவசாய உத்தியோகித்தர்கள் நியமனம்.
திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலயத்தில் கிழக்கு மாகாண விவசாயப் பிரதிப் பணிப்பாளர் வேதாரணியம் தலமையில் கிழக்கு மாகாணத்திற்கான புதிதாக நியமனம் செய்யப்பட்ட விவசாய உத்தியோகஸ்த்தர்களுக்கான (AGRICULTURE OFFICER) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் து. நவரட்ணராஜா விவசாய, கால்நடை , சிறுகைத்தொழில், மீன்பிடி புத்தாண்டில் பாரிய மாற்றம் அடையும் எனவும் பிறந்திருக்கும் புத்தாண்டில் கிழக்கு மாகாண மக்களது வாழ்வாதாரம் பொருளாதாரம் புதுப்பொழிவினை பெறுவதற்கு எமது அமைச்சு பாரிய வேலைத்திட்டத்தினை இந்த ஆண்டில் சிறப்பான ஒரு அடித்தளத்தை இட்டுள்ளது எனவும் இதனூடாக எமது சமூகம் பொருளாதார ரீதியாக பல மாற்றத்தை அடையும் எனவும் புத்தாண்டில் அவர்கள் வாழ்வாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை அடைவார்கள் என கூறுவதில் நான் மன மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைவிட இந்த 2011ம் ஆண்டில் எமது நாட்டின் பொருளாதாரத்தில் எமது மக்களின் பொருளாதாரம் விவசாயமாகும். அந்த வகையில் 2010ம் ஆண்டு விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக ரூபா. 83000000 எமது அமைச்சினால் கிழக்கு மாகாணத்தின் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் ஒதுக்கீடானது 2011ம் ஆண்டிற்கான எமது மாகாணத்தின் மூலதனமாக அமைந்துள்ளது. இவ் ஒதுக்கீட்டில் அதியுயர் விதை நெற்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் , பழப்பயிர்கள், விவசாயக்காணிகளுக்கான பாதுகாப்பு வேலிகள் என்பன விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது தவிர இவ்வாண்டில் விவசாயத்துறையில் புதிய தொழிநுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதனடிப்பமையில் இயற்கைக்கழிவுகளைக்கொண்டு தயாரிக்கும் உயிர்வாயு உற்பத்தி இது எமது வவிசாய மக்களினது சமயல் எரிவாயுவை இலகுவாக பெறக்கூடியதாக இருக்கும் இதனால் இதிலிருந்துவருகின்ற ஏனைய கழிவகள் சிறந்த பசளையாக விவசாய நிலங்களுக்கு இட முடியும். அது தவிர சூரிய ஒளிமூலம் சக்தியைச் சேகரித்து உற்பத்திகளை வத்தலிடும் முறையினை இந்த வருடம் அறிமுகம் செய்திருக்கின்றோம் அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் மழை நீர்த் தாங்கிகள் 90 அமைக்கப்பட்டதுடன் விவசாயக்கிணறுகள் 100 அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் கடந்தகால யுத்தத்தின் போது கைவிடப்பட்ட 150000 ஏக்கர் விவசாயக்காணிகள் மீண்டும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் விவசாயத்துறையில் கிழக்கு மாகாணம் பாரிய விளைச்சலைப் பெறுமென நான் எதிர்பாக்கின்றேன்.
இதேபோன்றுதான்.. மீன்பிடித்துறையில் 909850 நன்னீர் மீன்குஞ்சுகள் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நன்னீர் நிலயங்களிலும் இடப்பட்டீருக்கின்றன. மீனவர்களின் தொழில் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கான வலைகள், தோணிகள், மீன்சந்தைகள் அமைக்கப்பட்டடிருக்கின்றன இதற்கான எனது நிதி ஒதக்கீட்டிலிருந்து ரூபா 9377345 ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மீன்பிடித்துறையானது இப்புதிய ஆண்டில் பாரீய பொருளாதார வழர்ச்சியை ஏற்படுத்தும் இதற்கான ஆரம்பமாக மீன்பிடித்துறையில் 909850 நன்னீர் மீன்குஞ்சுகள் நன்னீர் மீன் வளர்ப்புக்காக இடப்பட்டுள்ளது.
அவ்வாறே கால்நடைகளுக்காக ரூபா 470,0000 எமது அமைச்சிலிருந்து
பண்ணையாளர்களுக்கு ஒதுக்கியிருக்கின்றோம். இத்தறையில்தான் எமது மக்களின் சுய தொழில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இதனடிப்படையில் எனது அமைச்சினால் ஆடு ,மாடு ,கோழிகளை மக்களுக்கு வழங்கி அவர்களது சுயதொழிலை வளர்ப்பதற்கு எமது அமைச்சு பாரிய முயற்சிகளை எடுத்தது. அதனடிப்படையில் எமது மாகாண மக்களினது அன்றாட செலவுகளை நிவர்த்திசெய்யும் வகையில் எமது அமைச்சு மக்களுக்கு வழியமைத்து கொடுத்தது. அந்தவகையில் புதிய தொழிநுட்பத்தினூடாக' கிரிகொப் எனும் கலப்பு இன கோழிக்குஞ்சு இனம் இன்று குறைந்த விலையில் கொள்வனவு செய்து கூடிய நாட்கள் விற்பனைசெய்யமுடியும். இதன் அடிப்படையில் எமது பொருளாதாரம் உச்ச நிலை பெறும்
என தெரிவித்தார்.
விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக தகுதி நிறைந்த 15 புதிய இந்த விவசாய உத்தியோகத்தர்களும் தங்களுடய சேவையை முடிந்த வரை நிறைவாக மன உறுதியுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளை சிறப்பாக செய்யவேண்டும். கிழக்கு மாகாணத்தினுடைய விவசாயத்தினை வளர்த்தெடுக்கக் கூடிய பொறுப்பு உங்களிடமே உள்ளது எனத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி பாலசிங்கம், விவசாய அமைச்சின் செயலாளர் கே. பத்மநாதன் , கிழக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் குசைன், விவசாய அமைச்சன் பிரத்தியேக செயலாளர் ந.செந்தீபன் மற்றும் மாவட்ட பிரதிப்பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சு.சர்வேஸ்வரன் ஊடக இணைப்பாளர்
0 comments :
Post a Comment