இந்தியா மீதான 12 ஆண்டு கால ஹைடெக் தடையை நீக்கியது அமெரிக்கா
இந்தியா கடந்த 1998ம் ஆண்டு, பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. அப்போது முதல் ஹைடெக் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா தடை விதித்தது. தற்போது இந்தியா - அமெரிக்கா இடையே உறவு வலுவடைந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா மீதான ஹைடெக் பொருட்கள் ஏற்றுமதி தடை நீக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி அமெரிக்க வர்த்தக துறை, இந்தியா மீதான ஹைடெக் தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரோ, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துக்கு (டி.ஆர்.டி.ஓ) முக்கிய கருவிகளை சப்ளை செய்யும் 9 இந்திய கம்பெனிகள், இனிமேல் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து ஹைடெக் சாதனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் கேரி லாக், "இந்தியா மீதான ஹைடெக் பொருட்கள் ஏற்றுமதி தடை நீக்கம், இருநாட்டு உறவில் முக்கிய மைல் கல்லாக விளங்கும். அணு ஆயுத பரவல் தடை விஷயத்தில் இந்தியா நம்பிக்கைக்குரிய நாடு. அதனால் ஹைடெக் பொருள் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் குறிக்கோளாக இருந்தது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது" என்றார்.
0 comments :
Post a Comment