ஆஸ்திரேலியாவில் வெள்ளத்துக்கு 10 பேர் பலி; 72 பேரை காணவில்லை
ஆஸ்திரேலியாவில் உள்ள 3-வது பெரிய நகரான பிரிஸ்பேன் நகருக்குள் வெள்ளம் புகுந்தது. சுனாமி பேரலை போல 6 அடி உயரத்துக்கு எழுந்த வெள்ளத்துக்கு 10 பேர் பலியானார்கள். கார்கள், மரங்கள் என எல்லாவற்றையும் அது அடித்து சென்றது. இந்த வெள்ளப்பெருக்கில் 72 பேரை காணவில்லை. அவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் தாக்கியது. இதன்காரணமாகவும் பெருமழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையால் நிரம்பிய ஆறுகள், அணைகள் அனைத்தும் புது மழையால் மேலும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.
ஆஸ்திரேலியாவின் 3-வது பெரிய நகரான பிரிஸ்பேன் நகருக்குள் திடீர் என்று சுனாமி போல 6 1/2 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் வழியில் எதிர்ப்பட்ட கார்கள், மரங்கள் அனைத்தையும் வெள்ளம் அடித்துச்சென்றது.
வெள்ளத்தின்போது சாலையில் நடந்து சென்றவர்கள் அதில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 9 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேர் சிறுவர்கள். இதுதவிர, 72 பேரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை தேடிக்கண்டு பிடிப்பதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால், அவர்கள் கூரைகளில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
வெள்ளம் காரணமாக அந்த நகரில் வசித்து வரும் 20 லட்சம் மக்களையும் ஊரை காலி செய்து விட்டு வெளியேறும்படி அரசாங்கம் உத்திரவிட்டு உள்ளது.
பிரிஸ்பேன் நகரில் உள்ள 6500 வீடுகள், வியாபார மையங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது என்று நகர மேயர் காம்ப்பெல் நிïமேன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பிரிஸ்பேன் நகர் அருகில் உள்ள அணை, ஏற்கனவே நகரம் வெள்ளத்தில் மூழ்காமல் தடுத்து வந்தது. அது இப்போது நிரம்பி விட்டதால், அதை அதிகாரிகள் இப்போது திறந்து விட்டு உள்ளனர். அதுதான் இப்போது நகருக்குள் புகுந்து இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது'' கூறினார்.
0 comments :
Post a Comment